தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில பொது குழு இன்று நடைபெறுகிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய ஓராண்டு நிறைவடைந்த நிலையில் முதன்முதலாக நடைபெற இருக்கக்கூடிய இந்த பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை 120 மாவட்டங்களாக பிரித்து அந்த 120 மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து மற்றும் பிற கட்சி பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து தலைவர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தவெக தலைவர் விஜயின் நேரடி நேர்காணலுக்கு பிறகு இந்த அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் முதல் மாநில பொதுக்குழு இன்று (28-March-2025) நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த பொதுக்குழு நடைபெறும் வளாகத்தில் பல்வேறு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகை ஒன்றில் சர்ச்சைக்குரிய ஒரு வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.
அதில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த் அவர்களை வருங்கால முதலமைச்சர் என்று போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இந்த போஸ்டர் ஈசிஆர் சரவணன் என்பவரால் அடிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
இது குறித்து ஈ.சி.ஆர். சரவணனிடம் கேள்வி எழுப்பும்போது அந்த போஸ்டருக்கும் எனக்கும் சம்பந்தமில்லைங்க என்று கூறியிருக்கிறார்.
கவனக்குறைவு காரணமாக இந்த போஸ்டர் அச்சிடப்பட்டதா..? அல்லது நிஜமாகவே தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் புஸ்ஸி ஆனந்தா என்ற கேள்விகள் எழுப்பி வருகின்றன.
ஏனென்றால் முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஸ்ஸி ஆனந்த் முதல்வர் வேட்பாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை இந்த போஸ்டர் எழுப்பி இருக்கிறது. அதே நேரம், சர்கார் திரைப்படத்திலும் நடிகர் விஜய் முதல்வர் பொறுப்பை ஏற்க் மறுப்பார். இது இரண்டையும் பொருத்தி பல்வேறு மீம்கள் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.