18 ஆண்டுகளுக்கு பிறகு சிம்மத்தில் கேது பெயர்ச்சி - இந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்..!


ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு அளிக்கின்றன. 

அந்த வகையில், ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கேது பகவான் சாயா கிரகமாக கருதப்படுகிறார். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 18 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார். மீண்டும் அந்த ராசிக்கு வர 18 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்.

பொதுவாக மக்கள் மத்தியில் கேதுவின் பெயர்ச்சி ஒருவித அச்சத்தை ஏற்படுத்தினாலும், கேது பகவான் ஒருவரை குபேரனாக்க நினைத்தால் நொடிப்பொழுதில் அதை செய்து விடுவார் என்பது ஜோதிட நம்பிக்கை.

இந்த நிலையில், வரும் மே மாதம் 18ஆம் தேதியன்று சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி 18 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறது. அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு (Sagittarius)

கேது பகவானின் இந்த இடமாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. இதன் காரணமாக, பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். வணிகம் தொடர்பானவர்களுக்கு தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த பெயர்ச்சி வருமானத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பணம் தற்போது உங்களைத் தேடி வரும். 

நிதி சம்பந்தப்பட்ட திட்டங்களில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய முதலீடுகள் செய்வதற்கு இது உகந்த காலகட்டம். நீங்கள் செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பங்குச்சந்தை முதலீடுகளும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடி வரும். 

நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்துக்கொண்டிருந்த ஒரு முக்கியமான காரியம் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். புதிதாக வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ஆக, மே 18ஆம் தேதி நிகழும் கேது பெயர்ச்சி இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் பல நன்மைகளை வாரி வழங்கப் போகிறது. இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் மேலும் பல உயரங்களை அடையலாம்.