கூட்டணிக்கு தயார்.. ஆனால்.. யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்த சீமான்


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான சீமான் சமீபத்தில் தன்னுடைய அரசியல் கட்சியின் கூட்டணி கொள்கை குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார். 

அவர் கூறியதாவது, கூட்டணிக்கு தயார்.. ஆனால்.. என்னை எதற்காக கூட்டணி வைக்க சொல்கிறீர்கள்..? கூட்டணி வைத்தால் சொற்பமான இடங்களில் என்னால் ஜெயிக்க முடியும்..எங்களுடைய கட்சியால் ஜெயிக்க முடியும்.. சில எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள்.. அவ்வளவுதான். 

அதைத்தாண்டி என் மக்களுக்கு என்ன நல்லது என்னால் செய்து விட முடியும்..? இன்று ஆட்சியில் இருக்கக்கூடிய அரசுடன் கூட்டணி வைத்த கட்சிகள் அவர்கள் செய்யக்கூடிய அராஜகங்களை அரசின் அவலங்களை நாட்டில் சீர்குலைந்து கிடக்கும் சட்ட ஒழுங்கை அவர்களுடைய ஊழலை அவர்கள் கொள்ளை அடிப்பதை பற்றி கேள்வி எழுப்ப முடிகிறதா..? முடியாது. 

ஏனென்றால், கூட்டணி என்ற பெயரில் அந்த தலைவர்கள் தங்களுடைய கட்சியை ஆளும் கட்சியுடன் அடமானம் வைத்து விட்டார்கள். அப்படி என்னுடைய கட்சியையும் அடமானம் வைத்துவிட்டு ஆளும் அரசுக்கு ஆதரவாக அவர்கள் செய்யக்கூடிய அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் ஆதரவாக என்னை நீங்கள் நிற்க சொல்கிறீர்கள். 

எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சி செய்யக்கூடிய துரோகங்களை தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலைக்கு கூட்டணி கட்சிகள் தள்ளப்படும். 

கூட்டணி என்பது என்ன..? தேர்தல் நேரத்தில் நினைத்து ஒரு குறைந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஆட்சிக்கு வருவதுதான். ஆனால், இங்கே அப்படி நடக்கிறதா.? கூட்டணி என்ற பெயரில் ஒட்டுமொத்த கட்சியையும் குறிப்பிட்ட கட்சிக்கு அடமானம் வைத்து விடுகிறார்கள். 

தங்களுடைய கட்சியின் வேட்பாளர்களை தனி சின்னத்தில் நிறுத்த முடிவதில்லை.. இப்படி செய்து ஒரு சட்டமன்ற உறுப்பினரை.. ஒரு சட்டமன்ற தொகுதியை வெற்றி பெற்று அவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்..? 

நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை எதிர்த்து கேட்க முடியவில்லை.. நீ எல்லாம் என்ன தலைவன்..? நான் ஜெயிக்கவில்லை தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் சீமான் கேப்பான் டா என்று என் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நாசம் செய்து விட்டு சில சட்டமன்ற உறுப்பினர்களை மற்றும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்.. 

நான் விதை போட்டேன்.. இப்போது செடியாக வளர்ந்துள்ளது.. அது முளைக்க வேண்டும்.. வளர வேண்டும்.. மரமாக வேண்டும்.. காய் காய்க்க வேண்டும். ஆனால், நீங்கள் இந்த செடியில் காய் காய்க்க வேண்டும் அதிலிருந்து பழம் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நானும் அப்படி நினைக்கவில்லை என்னுடைய மக்களும் என்னை அப்படி நினைக்கவில்லை.

நேற்று கட்சி ஆரம்பித்து இன்று ஜெயித்து விட்டு போவதற்கு நான் என்ன அரசியல் தலைவர்களின் வாரிசா..? நான் தமிழக மக்களின் வாரிசு. தமிழக மக்களுக்காக களமாடி கொண்டிருக்கிறேன். சில காலம் ஆகும். என் வாழ்நாளில் நான் ஜெயிக்க முடியாமல் போய்விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 

நான் வலுவான ஒரு கட்டிடத்தை கட்டி வைத்திருக்கிறேன். எனக்கு பின்னால் என்னுடைய தம்பியோ தங்கையோ இந்த நாட்டை ஆண்டு விட்டு போகட்டுமே.. மீண்டும் சொல்கிறேன்.. எந்த காலத்திலும் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காது.. தனித்தே களமாடும் தனித்தே மக்களை சந்திக்கும் என பேசி இருக்கிறார் சீமான்.