நடிகை பாவனா தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. ஆனால், ஒரு கட்டத்தில் திடீரென தமிழ் படங்களிலிருந்து நடிக்காமல் ஆள் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் காணாமல் போய்விட்டார்.
இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு உள்ளாகி மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிய நடிகை பாவனா தற்போது அதிலிருந்து மீண்டும் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் ஏன் தமிழ் படங்களில் நடிப்பதே கிடையாது. வேண்டுமென்றே தமிழ் படங்களை தவிக்கிறீர்களா அல்லது அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை பாவனா தமிழ் படங்களில் நடிக்கக்கூடாது என்ற எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. அதே சமயம், இது எதேர்சையாக நடந்ததுமில்லை.
நான் தமிழ் படங்களில் நடிக்கும்போது எனக்கென ஒரு மேனேஜர் இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கும் எனக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு எனக்கு தமிழ் படங்களில் இருந்து வாய்ப்பு வரவில்லை.
என்னை பார்க்கக்கூடிய தமிழ் பிரபலங்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அதனால் தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று என்னிடமும் என்னுடைய தம்பியிடமும் கூறியிருக்கிறார்கள்.
உண்மைய சொல்லப்போனால் நிறைய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் என்னுடைய மேனேஜர் தான் தொடர்பில் இருந்தார். என்னுடைய மேனேஜரை விட்டு நான் விலகிய பிறகு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு என்னை தொடர்பு கொள்வது கடினமான விஷயமாக மாறிவிட்டது.
இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை பாவனா.