பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
அதற்கு முன்னதாக தவெக நடிகர் விஜய், பாஜகவும் திமுகவும் கூட்டணி கட்சிகள் தான். ஆனால், சண்டை போடுவது போல நடித்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத பிரச்சனைகளை புகார்களாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்களை அந்த பிரச்சனையின் மீது மட்டும் கவனம் செலுத்த வைத்துவிட்டு பின்னால் தங்களுடைய ஆட்சியில் நடக்கக்கூடிய அவலங்கள், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் ஆகியவற்றை மறைத்து வருகின்றனர்.
இதனால் தமிழக மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. நாட்டில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் அதை எல்லாம் விட்டுவிட்டு உப்பு சாப்பிடாத பிரச்சனைகளை பெரிதுபடுத்தி மக்களை திசை திருப்புகிறார்கள் எனும் விதமாக காட்டமாக பேசியிருந்தார் நடிகர் விஜய்.
இந்நிலையில், இது குறித்து பேசிய அண்ணாமலை யார் நடிக்கிறார்கள்..? நான் நடிக்கிறேனா.. விஜய் நடிக்கிறாரா..? நாங்கள் களத்தில் நின்று கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.. நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளின் நடிப்பை கிள்ளி கொண்டு Work From Home பாலிடிக்ஸ் செய்து கொண்டு இருக்கிறார் மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் கடுமையாக சாடி இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யும் தவெக தொண்டர்களும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர். நீங்க புஸ்ஸி ஆனந்த் பற்றி கேவலமாகவும் ஏளனமாகவும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இலங்கை போர் நிறுத்தத்திற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் தளபதி விஜய்யுடன் தோளோடு அமர்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் புஸ்ஸி ஆனந்த் பற்றி பேசலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.