வரலாற்றிலேயே முதன் முறையாக சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. அதிர்ந்த சபாநாயகர்..!


சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது நாள் விவாதத்தின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், இந்த கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்த விவாதத்தின் இடையே, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் த. வேல்முருகன் குறுக்கிட்டு தனது கருத்துக்களை முன்வைத்தார். 

இந்நிலையில், த. வேல்முருகனின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். வேல்முருகன் அவை உறுப்பினர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் குற்றம்சாட்டினார். 

மேலும், வேல்முருகனின் வார்த்தைகள் சட்டப்பேரவையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு எதிராகவும், உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் இருக்கிறது. அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறார் வேல்முருகன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வரலாற்றிலேயே முதன் முறையாக சட்டமன்றத்தில் சக சட்ட மன்ற உறுப்பினரை பார்த்து அதிகப்பிரசங்கி என்று ஸ்டாலின் கூறியுள்ளார் என்று தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் சபாநாயகர் அப்பாவு.