நடிகர் விஜயின் தந்தையும் பிரபல சினிமா இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக்கான கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்தும் பேசியிருக்க கூடிய தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
இவர் ஏற்கனவே இந்த விஷயத்தை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் என்றாலும் கூட தற்போது இந்த விவகாரம் இணைய பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது, புஸ்ஸி ஆனந்த் எப்படி தன்னை ப்ரமோட் செய்து கொள்கிறார் என்றால்.. ஒரு அரசியல்வாதி கூட இப்படி செய்ய மாட்டான்.. வெட்கக்கேடு.. ஒரு ஆன்லைன் குரூப் வைத்திருக்கிறார். அந்த குரூப்பில் புஸ்ஸி ஆனந்த் அட்மினாக இருக்கிறார்.
அந்த குரூப்பில் விஜயும் இருக்கிறார். இதனால், அவர் என்ன செய்கிறார் என்றால் மன்ற அலுவலகத்திற்கு வெளியே ஒரு பெஞ்சில் படுத்துக்கொண்டு இன்னொருவரை வைத்து போட்டோ எடுக்க சொல்லி அந்த போட்டோவை விஜய் இருக்கக்கூடிய அந்த குரூப்பில் பதிவு செய்கிறார்.
அந்த போட்டோவை, ஒரு 50 பேரை வைத்து அந்த புகைப்படங்களை ஷேர் செய்ய சொல்கிறார். ஒரு 100 பேரை வைத்து அந்த புகைப்படங்களுக்கு லைக் செய்ய சொல்கிறார்.
இந்த புகைப்படத்தை விஜய் பார்க்கிறார்.. அடடா.. என்னடா இது நமக்காக உழைத்து விட்டு போய் இப்படி கீழ படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாரே.. என்று உடனே புஸ்ஸி ஆனந்துக்கு போன் செய்து அண்ணே நீங்க நாளையிலிருந்து என்னோட ரூம் யூஸ் பண்ணிக்கோங்க என்று கூறுகிறார் என்று தன்னுடைய அந்த பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.
எஸ் ஏ சந்திரசேகர் கூறிய இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
எல்லாம் ஆன்லைன் இருக்கீங்களா நண்பா/ நண்பீஸ். 🤣🤣🤣 pic.twitter.com/AwimKLG4ZN
— மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁 (@sultan_Twitz) March 19, 2025